நடனத்தில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன்.! வெளியானது பிரின்ஸ் பட பிரமோ…

prince
prince

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இன்நிலையில் படத்தின் பிரமோஷன் பணியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியதி வெற்றியடைந்தது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி உள்ளது இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த இடத்தை பூர்த்தி செய்யுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் அக்டோபர் ஒன்பதாம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் சென்னையில் பிரமாண்டமாக நடத்த படக்குழுவின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நினையில் பிரின்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில்  வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் பிரின்ஸ் படத்தில் இடம் பெற்ற பாடலின் பிரம்மோ வீடியோவை படகுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் மற்றும் மரியா ஆகிய இருவரும் செம்மையாக டான்ஸ் ஆடி உள்ள காட்சிகள் இருப்பது ரசிகர்கலுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அனுதீப் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியீட்டு உரிமை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த பிரமோ வீடியோ…