நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் கடந்த மாதம் வெளியாகிய டான் திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்து வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் 74.50 கோடி வசூலை பெற்ற நிலையில் உலகமெங்கும் 116 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது டான் படம்.
இதனால் படக்குழு மற்றும் சிவகார்த்திகேயன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மேலும் இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் சுமார் 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்ததால் சினிமாவில் டாப் நடிகர்களான அஜித், விஜய்க்கு நிகராக சிவகார்த்திகேயன்.
வசூல் மன்னனாக மாறியுள்ளார். இவர் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பயணித்து பின்பு வெள்ளித்திரையில் நாம் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மட்டுமே சினிமாவிற்கு வந்தவர் ஆனால் அவரே எதிர்பார்க்காத..
அளவு அவரது படங்கள் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளதால் அடுத்தடுத்து அவர் நடிக்க உள்ள படங்களில் கவனமாக கதையை தேர்வு செய்து வருகிறார் மேலும் சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் தனது படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வசூலை பெறுவதால்..
அவரது சம்பளத்தையும் அதிகமாக்கி உள்ளாராம் அதனால் அவரை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் எனது சம்பளம் போக 50 கோடி பட்ஜெட்டில் உங்களால் படமெடுக்க முடியுமா என கேட்கிறாராம். அவரது படங்கள் நல்ல வசூலை அள்ளுவதால் சிவகார்த்திகேயன் தற்போது பேராசை பிடித்த பேசுகிறார் என்ற செய்திகள் உலா வருகின்றன.