Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் பல இடங்களில் கடன் வாங்கி விட்டு கடனை கொடுக்க முடியாமல் திண்டாடி வருகிறார் இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கடன் வாங்கிய தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி ஒரு பொதுக்கூட்டம் அமைத்து சிவகார்த்திகேயனிடம் வாங்கிய கடனை தவணை முறையில் ஒவ்வொரு படம் வெளியாகும் பொழுதும் அடைக்க வேண்டும் என முடிவு செய்தார்கள் இதனை சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார்கள்.
முதலில் மண்டையை மண்டைய ஆட்டிய சிவகார்த்திகேயன் கடன் கொடுத்தவர்களுக்கு நாமத்தை சாத்த முயற்சி செய்துள்ளார். ஒவ்வொரு முறை படம் வெளியாகும் பொழுதும் கடனை அடைக்காமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார் அதனால் எப்படியாவது இந்த முறை விடக்கூடாது என ஒட்டுமொத்த கடன் கொடுத்த தயாரிப்பாளர்களும் முடிவு செய்தார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய மாவீரன் திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படம் வெளியான பிறகு அந்த வசூலில் வரும் 33 கோடி ரூபாய் அமௌன்ட் எடுத்து கடன் காரர்களுக்கு செட்டில் செய்ய வேண்டும் மீதம் உள்ள கடனை அடுத்தடுத்த திரைப்படங்களில் இதே போல் செட்டில் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்கள் அந்த வகையில் மாவீரன் திரைப்படம் வெளியான பிறகு வசூலில் வரும் 25 கோடி ரூபாயும் மாவீரன் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே 8 கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும் என சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார்கள் தயாரிப்பாளர்கள்.
மாவீரன் திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தையும் கொடுத்துவிட்டால் நாம் என்ன செய்ய முடியும் என யோசித்து யார் பின்னாடி ஒளிந்து கொண்டால் கடன் காரர்கள் துரத்த மாட்டார்கள் என முடிவு செய்து கடன்காரர்களை அலைச்சலில் விடுவதற்காக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிர்வாணம் பின்பு ஒளிந்து கொள்ள முயற்சி செய்தார் அதனால் மாவீரன் திரைப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தார். யார் பின்னாடி ஒளிந்து கொண்டால் கடன்காரர்கள் வர மாட்டார்கள் என நினைத்தாரோ அவராலையே சிவகார்த்திகேயனுக்கு பெரும் தொல்லை வந்துள்ளது.
தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நேரடியாக இந்த விஷயத்தை உதயநிதி அவர்களிடம் கொண்டு சென்றுள்ளார்கள் அப்பொழுது சிவகார்த்திகேயன் வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் டிமிக்கி கொடுத்து வருவதாக உதயநிதிடம் கோரிக்கை வைத்தார்கள் அது மட்டும் இல்லாமல் தவணை முறையில் கூட இதுவரை பணத்தை செலுத்தவில்லை எனவும் கூறியுள்ளார்கள்.
உடனே உதயநிதி மாவீரன் திரைப்படத்தில் வரும் வசூலில் கடன் கொடுத்தவர்களின் கூட்டமைப்புக்கு சேர வேண்டிய பணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வசூல் செய்து தரப்படும் என உதயநிதி வெளிப்படையாக வாக்கு கொடுத்துள்ளார் அதனால் மாவீரன் திரைப்படத்தின் கலெக்ஷன் அவர்களுக்கு போய் சேர்ந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் மாவீரன் திரைப்படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. உதயநிதி இந்த விஷயத்தில் நேர்மையாக நடந்து கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பாராட்டை பெற்று வருகிறார்.