அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து விட்டு ரஜினியை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்.! எப்படி எல்லாம் ஐஸ் வைக்கிறார் பார்த்தீர்களா.!

rajini
rajini

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் அண்ணாத்த இந்த திரைப்படம் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்ததிரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது மேலும் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

பலரும் சமூக வலைதளங்களில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என கேட்டு வந்த நிலையில் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படும் என கூறிய நிலையில் இன்று அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக மிரட்டலாக வெளிவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் பலரும் ரஜினி நடித்துள்ள இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என கேட்டு வந்த நிலையில் பலரும் இந்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தைப் பற்றி ட்விட் செய்துள்ளார்.

இதில் தலைவர் எப்போதும் கொல மாஸ் தான் அண்ணாத்த மாபெரும் வெற்றி பெறும் திரையில் படத்தை காண காத்திருக்கிறேன் என பதிவு செய்துள்ளார் மேலும் இவரை போல பல சினிமா பிரபலங்களும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து விட்டு கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.