எனக்கும் அந்த வில்லனுக்கும் எந்த போட்டியும் கிடையாது.. மேடையில் சொம்பு தட்டி வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன்

sivakarthikeyan
sivakarthikeyan

Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் மாவீரன். இந்த திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த படத்தில் இதற்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் நடித்திருந்த நிலையில் இவர்களுடைய ஜோடி நன்றாக இருந்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படி முக்கியமான பாடல்தான் வண்ணாரப்பேட்டையில இவர்கள் இருவரும் இணைந்து இந்த பாடலை பாடியிருந்தனர்.

இந்நிலையில் எனக்கும் அந்த வில்லன் நடிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என பாலிவுட்டில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அந்த வில்லன் நடிகரை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் அவர் யார் என்பது குறித்து பார்க்கலாம்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இந்த படத்தில் முக்கியமான கேரக்டர் என்று சொன்னால் விஜய் சேதுபதி பேசியிருந்த அந்த குரல் தான். இந்த குரல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளி உள்ளார். அதோடு மட்டுமல்லாமல் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது எந்த ஈகோவும் கிடையாது என கூறியுள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதி- சிவகார்த்திகேயன் இருவரும் கொஞ்சம் எதிரும் புதிருமாக இருந்து வந்த நிலையில் தற்போது அதெல்லாம் சரியாகி இருக்கிறது.

மேலும் விஜய் சேதுபதி பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில் இவரை வைத்து அப்படியே பாலிவுட்டில் நடிக்க போய்விடலாம் என சிவகார்த்திகேயன் கணக்கு போட்டு வருகிறாராம். விஜய் சேதுபதி மாவீரன் படத்தில் பணியாற்றியதற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.