தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டங்களில் இருந்து தற்போது வரை தனது கடின உழைப்பின் மூலம் பல ஹிட் படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், சிம்பு, தனுஷ் போன்ற டாப் நடிகர்களுக்கு இணையாக சில ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் கால்தடம் பதித்து காமெடி கலந்த நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.
இவர் ஆரம்பத்தில் சின்னத்திரை தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பின்பு சினிமாவில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ரெமோ போன்ற அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
மேலும் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி மாபெரும் ஹிட்டடித்தது. தற்போது சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என தெரியவருகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்த SK 20 படத்திலும் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹிட் படத்தில் ஒன்று ரெமோ. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடம் அணிந்து மக்களை என்டர்டெய்மெண்ட் செய்து வந்தார்.
ரெமோ படத்தின் படப்பிடிப்பின்போது சிவகார்த்திகேயனின் அணிந்திருந்த பெண் வேடத்தில் ஒளிப்பதிவு துறையின் லெஜெண்ட்களில் ஒருவரான பிசி ஸ்ரீராம் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன.