கிரிக்கெட் விளையாட்டில் இறங்கி ஆடும் சிவகார்த்திகேயன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகனுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தன்னுடைய கடின உழைப்பு மற்றும் திறமை மூலமாக ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் அந்த வகையில் சினிமாவில் நுழைவதற்கு இவர் அயராது பாடுபட்டுள்ளார்.

அந்த வகையில் இவருக்கு வாழ்க்கை கொடுத்தது எனவோ விஜய் டிவி தான் இந்த விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிக்காட்டினார் இதனை தொடர்ந்து அவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் நமது நடிகர் தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருவது மட்டுமல்லாமல் டாப் டென் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். மேலும் சமீபத்தில் நமது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து புதுமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் தான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய சுமார் 125 கோடிக்கு மேலாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து இரண்டு ஹிட் திரைப்படத்தை கொடுத்ததன் காரணமாக பல்வேறு இயக்குனர்களும் சிவகார்த்திகேயனை வைத்த திரைப்படம் இயக்குவதற்கு ஆசைப்படுகிறார்கள்.

மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் மற்றும் அயலான் என்ற இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளது மேலும் இந்த திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெறுவதற்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது என பலரும் கூறி வருவது மட்டுமல்லாமல் சமீபத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடி உள்ளார் இதோ அந்த வீடியோ.