தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது அடுத்தது நான்தான் ரஜினி ஆக வேண்டும் என பலரும் போட்டி போட்டு வருகிறார்கள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து பிறகு வில்லனாக அறிமுகமாகி இதன் மூலம் ஹீரோவாக ஆக்சன் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த்.
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார் எனவே இவருடைய பட்டத்துக்கு பல நடிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் முக்கியமாக விஜய் மற்றும் சிவகார்த்திகேயனை கூறலாம் ரஜினிக்கு அடுத்ததாக விஜய்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வரும் நிலையில் ஆனால் விஜய் திடீரென அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
எனவே ரியோ திரைப்படம் தான் இவருடைய கடைசி படம் எனவும் கூறப்படுகிறது. இதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் ரஜினியின் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் அதாவது சிவகார்த்திகேயனின் மாவீரன் பட விழாவில் பேசிய நடிகை சரிதா சிவகார்த்திகேயனை பார்த்தால் எனக்கு ரஜினி போலவே தான் இருக்கிறது அதனால் அவரை குட்டி ரஜினி என்றுதான் அழைப்பேன் என சொல்ல இது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் இதனை ட்ரோல் செய்து வந்தார்கள்.
அதேபோல் அதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மிஷ்கின் ரஜினி மாதிரியெல்லாம் இல்லை ரஜினியே தான் என சொல்ல ரஜினி ரசிகர்கள் கடுப்பாளர்கள். ரஜினி 35 வருடங்களாக சினிமாவில் மார்க்கெட்டை இழக்காமல் இருந்து வரும் நிலையில் எப்படி அவருடன் ரஜினியை ஒப்பிடலாம் என கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் ரஜினியோடு என்னை ஒப்பிட வேண்டாம் அவர் வேற லெவல் பேசி வந்தாலும் வேலைக்காரன், மாவீரன் போன்ற படங்களுக்கு ஏன் இப்படி தலைப்பு வைத்தார்கள் என கூறி வருகின்றனர்.
மிமிக்கிரி கலைஞராக சினிமாவிற்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் பிறகு ரஜினியைப் போலவே பல மேடைகளில் மிமிக்ரி செய்தார் அதன் பிறகு தொகுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் ரஜினியை எந்த அளவிற்கு குழந்தைகளுக்கு பிடித்திருக்கிறதோ அதேபோல் சிவகார்த்திகேயனையும் பிடித்துள்ளது எனவே அடுத்த ரஜினி சிவகார்த்திகேயனாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.