கன்னட சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த புனித் ராஜ்குமார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்செய்தியைக் கேட்ட திரை உலக பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
ஒரு சில பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் ஒரு சிலரால் வர முடியாததால் சமூக வலைதளப் பக்கத்தில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர். புனித் ராஜ்குமார் ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டி மக்களுக்காக சேவை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார்.ஏன் இவர் 1800 குழந்தைகளுக்கு இலவசக் கல்வியைக் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த இவர் உயிரிழந்தது பலருக்கும் தற்போது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது சகோதரர் சிவராஜ்குமாரையும் சந்தித்தார். மேடை ஒன்றில் ரஜினியை போல் நான் பேசி காட்டினேன் அதற்காக என்னை பாராட்டினார்.
மேலும் ஒரு சமயத்தில் எனக்கு போன் செய்து இந்த பக்கம் வந்திங்கனா எங்கள் வீட்டுக்கு நீங்கள் வரவேண்டும் என கூறி இருந்தாராம். சினிமாவில் இருக்கும் எல்லோரையும் சக நண்பர்களாகவும், சகோதரனாகவும் பார்த்து வந்தவர் புனித் ராஜ்குமார்.அவரே தற்பொழுது இரந்தது யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று என தெரிவித்தார் மேலும் சிவகார்த்திகேயன் கூறியது.
அவரைப் பார்க்க அதிகம் ஆசைப்பட்டேன் ஆனால் இப்படியான ஒரு சூழ்நிலையில் தான் பார்க்க வேண்டுமா என வருத்தத்துடன் சொன்னார். நடிகர் சிவகார்த்திகேயன் புனித் ராஜ்குமார் நினைவிடத்துக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அவரது சகோதரர் சிவராஜ் குமாரை சந்தித்த போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.