தமிழ் சினிமாவில் காமெடி, ஆக்சன் போன்ற படங்களை கொடுத்து மக்களை மகிழ்வித்த வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் இருந்து படிப்படியாக வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூலை அள்ளியதால் இவரது மார்க்கெட் தற்போது அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
இப்படி இருந்தாலும் சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் பெரிய அளவில் நடத்தவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது அந்த வகையில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், சீமராஜா ஆகிய படத்தை 24 ஏ எம் ஸ்டுடியோஸ் தயாரித்து இருந்தது.
அந்த படங்கள் மிகப்பெரிய ஒரு தோல்வியை தழுவியதால் தயாரிப்பாளர் ஆர் டி ராஜாவுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டது அதை சரிகட்ட நடிகர் சிவகார்த்திகேயன் பல்வேறு உதவிகளை செய்தார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பையும் தாண்டி படங்களை தயாரிக்கவும் முன்வந்தார் அதில் பல்வேறு திரைப்படங்கள் தோல்வியை சந்திக்க போட்டோ பணம் வராமல் போக பல கோடி கடனில் சிக்கித் தவித்து வந்தார்.
இருப்பினும் சினிமாவில் நடித்து வந்தார் அந்த வகையில் நெல்சன் திலீப் குமாருடன் கைகோர்த்து டாக்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் எதிர்பார்க்காத ஒரு வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்ததால் வசூலை வாரி குவித்தது இந்த திரைப்படம் 100 கோடி அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார்.
இதனால் மொத்த கடனையும் ஒரே படத்தின் மூலம் அடைத்துவிட்டு தற்போது கெத்தாக இருக்கிறார். இப்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து படம் பண்ண தற்போது தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றனராம் ஏனென்றால் இப்பொழுது அவருக்கு மார்க்கெட் அதிகமாக இருப்பதால் போட்ட பணத்தை எப்படியும் எடுத்து விடும் என்ற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு வந்துள்ளதாம்.