திரையுலகில் நடிக்கும் நடிகர், நடிகைகள் எப்பொழுதுமே தன்னுடைய தோல்வி படங்களை ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள் ஆனால் இதிலிருந்து மாறுபட்டவர் சிவகார்த்திகேயன் இவர் வெளிப்படையாகவே நான் நிறைய தோல்விய படங்களை கொடுத்திருக்கிறேன் என பேசி வருவது பலருக்கும் வியப்பை கொடுக்கிறது.
சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் படம் கடந்த ஜூலை 14 ம் தேதி கோலாகலமாக தமிழ்நாடு மற்றும் தெலுங்கில் வெளியானது. படம் அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் மற்றும் படத்தில் ஆக்சன் காமெடி சென்டிமென்ட் போன்றவைகளும் சூப்பராக அமைந்திருந்தது.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன், சரிதா, யோகி பாபு, மிஸ்கின், சுனில் மற்றும் பலரும் நடித்திருந்தனர் படம் தொடர்ந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடை கொண்டு வருகிறது இதுவரை மட்டுமே சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் சுமார் 50 கோடிக்கு மேல் வசூலில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மாவீரன் படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது அதுல அவர் சொன்னது என்றால்.. மாவீரன் பட வெற்றி ரொம்ப ஸ்பெஷல் போன படம் பிரின்ஸ் தோல்வி ஆனதால் அல்ல என கூறி இருக்கிறார். மேலும் பேசி அவர் நான் சினிமாவில் 10 வருடங்களாக இருக்கிறேன் வெற்றி, தோல்வி மாறி மாறி தான் வந்திருக்கிறது.
மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பிறகு நம்ம வீட்டு பிள்ளை வெற்றி, ஹீரோ படத்திற்கு பின் டாக்டர் வெற்றி, பிரின்ஸ் படத்திற்கு பிறகு இப்போ மாவீரன் வெற்றி பெற்றிருக்கிறது வாழ்க்கையில் வெற்றி, தோல்வி மாறி மாறி தான் வரும் இதை ஒரு நல்ல பயணமாக நான் பார்க்கிறேன் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.