திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக மாற முடியும் அதற்கு எடுத்துக்காட்டு நாம் சிவகார்த்திகேயன் தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் சின்னத்திரையில் எங்கேயோ ஒரு மூலையில் தொகுப்பாளராக இருந்த இவர் தனது பயணத்தை வெள்ளித்திரையில் தொடங்கிய பின் தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து.
நடித்ததன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக விஸ்வரூபம் எடுத்துள்ளாராம் மேலும் இவரது படங்கள் தொடர்ந்து ஹிட் அடிப்பதால் இவருக்கு மிகப்பெரிய ஒரு ரசிகர் பட்டாளம் தமிழ் சினிமாவில் இருக்கிறது.
அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடியைத் தாண்டி வசூலித்து சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அமோகமாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து யூடியூப் சேனல் பிளாக் பாண்டி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில் அவர் சொன்னது : விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒன்றாக பணிபுரியும்போது நெருக்கமான நண்பராக சிவகார்த்திகேயன் இருந்ததாக பிளாக் பாண்டி கூறினார். அவர் ஒரு தடவை நான் அதிக கஷ்டத்தில் இருந்த பொழுது சிவகார்த்திகேயனின் மேனேஜர் பணம் கொடுக்க வந்தார் ஆனால் நான் பணம் வேண்டாம்.
நடிக்க வாய்ப்பு இருந்தால் கொடுங்கள் என கூறினேன் அதை மேனேஜர் அவரிடம் எப்படி சொன்னார் என்று தெரியவில்லை அதன் பிறகு சிவா என்னிடம் பேசவதே இல்லை. ஆனால் அதை நினைத்து நான் வருத்தப்படவில்லை என கூறினார். இச்செய்தியை தற்போது இணைய தள பக்கத்தில் பெரும் செய்தியாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.