எனக்கு மறுவாழ்வு கொடுத்ததே சிவகார்த்திகேயன் தான்.. தூக்கி எறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதை மேலானது

Keerthy suresh
Keerthy suresh

Keerthy suresh : மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக நடித்தார். இருப்பினும் தமிழ் சினிமா தான் இவரை தூக்கிவிட்டது 2015 ஆம் ஆண்டு “இது என்ன மாயம்” படத்தில் நடித்து அறிமுகம் ஆனார் அதனைத் தொடர்ந்து  ரஜினி முருகன், ரெமோ  போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. அதன்பிறகு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தனுஷ், விக்ரம், சூர்யா, விஷால் போன்ற நடிகர்களுடன் நடித்து ஓடிக்கொண்டே இருந்தார் இந்த நிலையில் தான் “நடிகையர் திலகம்” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்து கைதட்டல் வாங்கினார்.

படம் வெளிவந்து  பலரது கவனத்தையும் கீர்த்தி சுரேஷ் இழுத்தார் இதன் மூலம் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. பிறகு தசரா, போலோ ஷங்கர், மாமன்னன் போன்ற படங்கள் ஹிட் அடித்ததால்   தற்பொழுது பட வாய்ப்புகள் குவிந்துள்ளன கீர்த்தி சுரேஷ் கைவசம் கண்ணிவெடி, ரிவால்வர் ரீட்டா ரகு தாத்தா, siren போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமிபத்திய பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ஆரம்ப கால சினிமா குறித்து பேசி உள்ளார் ஆரம்பத்தில் சில தோல்வி படங்களில் நடித்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்ததால் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டு விட்டாராம்..

Keerthy suresh
Keerthy suresh

அந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷ் நம்மளோட சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் 2016 ஆம் ஆண்டு ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்தார் படம் வெளிவந்து வெற்றி பெற்று மார்க்கெட்டை பிடித்தாராம்.. இல்லையென்றால் இந்த நேரம் அடையாளம் தெரியாமல் போய் இருப்பேன் என பேசி இருந்தார்.