சின்னத்திரையில் இருந்து பல நடிகர் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து வருகிறார்கள் அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், வாணி போஜன், பிரியா பவானி சங்கர், என பல நடிகர் மற்றும் நடிகர்களை கூறிக் கொண்டே போகலாம்.
சிவகார்த்திகேயனும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார், சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
அதேபோல் சில தோல்வி திரைப்படங்களையும் கொடுத்துள்ளார் ஆனால் அவரின் தோல்வி திரைப்படங்கள் இயக்குனரை பெரிதாக பாதித்துள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் மிகப்பெரிய தோல்வி திரைப்படமாக அமைந்தது மிஸ்டர் லோக்கல் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ரஜா ஆகிய இருவரும் முட்டிக் கொண்டார்கள் என்பது பலருக்குத் தெரியும். அதேபோல் சிவகார்த்திகேயன் பல மேடைகளில் ஞானவேல் ராஜாவை நேரடியாக தாக்கிப் பேசியுள்ளார்.
அப்படியிருக்கும் நிலையில் ஒரு திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் இருந்த மார்கெட்டுக்கு ஏற்ற சம்பளம் பேசிய நிலையில், சிவகார்த்திகேயன் தன்னுடைய மார்க்கெட் உயர்ந்ததும் ஞானவேல்ராஜா அவர்களிடம் அதிகமாக சம்பளம் கேட்டுள்ளார் அதுதான் அவர்களுக்கு பெரிய சிக்கலாக உருவெடுத்தது என கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் தோல்வி திரைப்படமாக அமைந்த மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை இயக்கியவர் எம் ராஜேஷ் ஆனால் இவர் காமெடி திரைப்படங்களை இயக்குவதில் வல்லவர் என்பது அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் இவர் இயக்கத்தில் வெளியாகிய சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி , பாஸ் என்ற பாஸ்கரன் ஆகிய திரைப்படங்கள் மெகா ஹிட் அடைந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த நிலையில் முதன் முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் ராஜேஷ் கூட்டணியில் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் அமைந்ததால் ரசிகர்களிடம் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது ஆனால் படம் வெளியாகி முதல் காட்சியிலேயே படம் படுதோல்வி என கணித்து விட்டார்கள்.
படம் தோல்வி அடைந்ததற்கு காரணம் சிவகார்த்திகேயனின் குறுக்கீடு எம் ராஜேஷ் அவர்களின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திலிருந்து தான். ஏனென்றால் ராஜேஷ் கதையில் சிவகார்த்திகேயன் குறுக்கிட்டு தனக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி படத்தை இயக்க சொல்லிக் கெடுத்து விட்டார் என பிரபல இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு ராஜேஷ் தமிழ் சினிமாவில் ஆளே அடையாளம் காணாமல் போய்விட்டார் என்கிறார்கள், இந்த நிலையில் தற்பொழுது எம் ராஜேஷ் ஜிவி பிரகாஷ் அவர்களுடன் இரண்டாவது முறையாக இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறாராம், அதுமட்டுமில்லாமல் ஜீவாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது இந்த இரண்டு திரைப்படத்திலும் ஒரு திரைப்படம் சொதப்பினாலும் சோலமுத்தா போச்சா என்ற காமெடிதன்.