சிவகார்த்திகேயனிடம் சொன்ன கதையில் கமிட்டான பிரபல முன்னணி நடிகர்..! அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும் என்ற இயக்குனர்..!

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவ்வாறு பிரபலமான நமது சிவகார்த்திகேயனிடம் ஒரு இயக்குனர் கதை ஒன்றை கூறியுள்ளாராம் இந்நிலையில் அதே கதையை  தனுஷை வைத்து இயக்க போவதாக சமூக வலைதளப் பக்கத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் தற்போது இந்த சிறப்பான கதையை மிஸ் செய்துவிட்டோம் என நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் சுந்தர் சி.

இவருடைய இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுப்பது மட்டுமல்லாமல் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அந்தவகையில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவிற்கு இவர் திரை படத்தில் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.

இந்நிலையில் முதலில் சிவகார்த்திகேயனிடம் தான் இயக்கப்போகும் திரைப்படத்தின் கதையை கூறினாராம் ஆனால் சிவகார்த்திகேயனுக்கு இந்த கதை பிடிக்கவில்லை ஆகையால் தற்போது நான் பிஸியாக இருக்கிறேன் பின்னர் இந்த திரைப்படத்தை பற்றி யோசிக்கலாம் என்று கூறி இருந்தாராம்.

இவ்வாறு நேரடியாக சொல்ல முடியாமல் சுற்றிவளைத்து கூறியதன் காரணமாக சுந்தர்சி என் திரைப்படத்தில் யார் நடித்தாலும் ஹிட்டாகும் இவர் தான் நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது என்று தனுஷிடம் இதே கதையை கூறினாராம்.  ஆனால் தனுஷிற்கு இத்திரைப்படத்தின் கதை மிகவும் பிடித்துப் போய் சம்மதம் தெரிவித்தாராம்.

இதனால் சிவகார்த்திகேயன் வேண்டாம் என்று சொன்ன கதையில் தனுஷ் நடிக்க இருப்பதன் காரணமாக இத்திரைப்படத்தை ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற காரணத்தினால் முழுமூச்சோடு இத்திரைப்படத்தில் இறங்கி வேலை செய்யப் போகிறாராம் சுந்தர் சி.

இவ்வாறு வெளிவந்த தகவலில் காரணமாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்களை தெரிந்துகொள்ள அவருடன் இருந்து வருகிறார்கள். பொதுவாக ஆக்ஷன் ஆக இருந்தாலும் சரி காமெடியாக இருந்தாலும் சரி தனுஷிற்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுவது போல. அந்தவகையில் இத்திரைப்படம் கண்டிப்பாக மெகா ஹிட் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

sundhar c
sundhar c