தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கவின். முதலில் சின்னத்திரை பக்கம் சீரியல், ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு கட்டத்தில் வெள்ளி திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் “நட்புனா என்னன்னு தெரியுமா” என்னும் படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.
இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும் அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்தார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு லாஸ்லியாவை காதலித்தார். ஆனால் இவரால் டைட்டில் வின்னர் பட்டம் பெறவில்லை..
இதுவரை பயணித்து வெளியே வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார்கள் மேலும் பட வாய்ப்புகளும் குவிந்தது. முதலில் லிப்ட் திரைப்படம் இவருக்கு அமோக வரவேற்பு பெற்று கொடுத்ததை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் கணேஷ். கே. பாபு இயக்கத்தில் கவின் நடித்த “டாடா” திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதை..
தொடர்ந்து நடன இயக்குனர் சதீஷ் இயகும் புதிய கதையில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தை ரோமியோ பிச்சர்ஸ் தயாரிக்க உள்ளது அனிருத் அந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் பட நடிகை பிரியா மோகனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறதாம்.
அது நடக்கும் பட்சத்தில் இந்த படத்தின் வெற்றிக்கான சதவீதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது ஏனென்றால் ப்ரியா மோகன் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்கின்றன மேலும் அவருக்கென ஒரு குரூப் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் காட்டு தீ போல வருகிறது.