பொது நிகழ்ச்சியில் அஜித்தை வயிறு குலுங்க சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன்.! வைரலாகும் வீடியோ..

ajith-sivakarthikyan
ajith-sivakarthikyan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வலிமை திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இந்த திரைப்படத்தின் மூன்றாவது முறையாக ஹச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடித்த முடித்துவிட்டு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கம் இருக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் பொது நிகழ்ச்சியில் அஜித்தை பற்றி சிவகார்த்திகேயன் கூறியதால் அவர் வயிறு குலுங்க சிரித்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்குபெற்று பிறகு தொகுப்பாளராக பணியாற்றி வந்து இதன் மூலம் காமெடி கதாபாத்திரங்கள் இருக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றினை பெற்றது இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தற்பொழுது பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் சினிமாவில் இந்த அளவிற்கு வளர்வதற்கு இவருடைய பேச்சுத் திறமை தான் காரணம் இவர் விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்த பொழுது ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அந்த வகையில் அவார்ட் நிகழ்ச்சி ஒன்றில் அஜித் கலந்து கொண்ட பொழுது சிவகார்த்திகேயன் ‘எனக்கு என்ன ஒரு சின்ன வருத்தம் இருக்கு இவருக்கு தம்பியா பொறக்காம போயிட்டோமே என்பதுதான் எனக் கூற அதற்கு மற்றொரு தொகுப்பாளர் ஏன் என கேட்கிறார் அதற்கு சிவகார்த்திகேயன் ஏன்னா இவர் கதை இல்லாமல் கூட படம் எடுப்பாரு ஆனா தம்பி இல்லாம படம் எடுக்க மாட்டாரு எனக்கூற அதற்கு அஜித் வயிறு குலுங்க சிரித்துள்ளார்.