sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் முதன் முதல் 2012ம் ஆண்டு எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் ஹிட் திரைப்படமாக மாறியதால் பேரும் புகழும் இவரைத் தேடி வந்தது. அதனால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்தார், வருத்தபடாத வாலிபர் சங்கம் திரைப்படம் வேறு 7 கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டது ஆனால் அந்த திரைப்படம் 35 கோடி வரை வசூல் ஈட்டியது, அதனைத் தொடர்ந்து மான் கராத்தே திரைப்படமும் ஓரளவு வசூல் செய்தது.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு சில திரைப்படங்கள் தோல்வியடைந்தாலும் தன்னுடைய பிளஸ் என்ன என்பதை தெரிந்து கொண்டு அடுத்த திரைப்படத்தில் வெற்றி கொடுத்துவிடுவார். அந்தவகையில் அவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹிட் கொடுத்து தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என பெரிதாக நம்பி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வந்து சில வருடங்கள்தான் ஆகிறது ஆனால் 100 கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளார் இதை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பதிலும் வெற்றி பெற்று வருகிறார். அசையா சொத்துக்கள் 100 கோடி என்றால், இதைத்தவிர பேங்க் பேலன்ஸ், வாகனம் என பல கோடி சொத்து இருக்கும் என கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.