கமலஹாசனை வைத்து புதிய திட்டம் போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் – கடைசியில் நேரத்தில் கண்டு பிடித்த அயலான் படக்குழு.!

sivakarthikeyan
sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி உடன் கை கோர்த்து நடித்த திரைப்படம் தான் டான். இந்த படமும் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியது நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் நல்ல வசூலையும் அள்ளிக் கொடுப்பதால் சிவகார்த்திகேயன் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறாராம். டான் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அயலான் இந்த படம் தற்போது படப்பிடிப்புகள் எல்லாம் முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் படம் எப்போது வெளிவரும் என்பது தெரிய வராமல் இருக்கிறது இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய திட்டத்தை போட்டுள்ளார் அதாவது கமலஹாசன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அந்த படத்தை வெளியிட்டால் நல்ல லாபம் பார்க்கலாம் எந்த பிரச்சனையும் வராது என முடிவெடுத்துள்ளது கமல் தரப்பிலிருந்து ஒரு ஆள் போய் உள்ளார்.

அவர் போய் பேசியதற்கு அயலான்  பட தயாரிப்பாளர் ஆர் டி ராஜா படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது மேலும் ஹிந்தி டப்பிங் உரிமை வெளிநாட்டு தியேட்டர் உரிமை, OTT, சாட்டிலைட் உரிமை என பலவற்றையும் முடிந்தது. அட்வான்ஸ் கூட வாங்கியாச்சு என கூறி உள்ளார். இனி மிஞ்சி இருப்பது தமிழ்நாடு தியேட்டர் உரிமை மட்டும் தான் இருப்பதாக கூறினார்.

அதனால் படத்தை நானே ரிலீஸ் செய்து விடுகிறேன் என ஆர் டி ராஜா கூறியுள்ளார். அயலான் படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பது ஆர் டி ராஜாவுக்கு மட்டுமே தெரியும் என கூறப்படுகிறது. டாக்டர், டான் படங்கள் வெற்றியை ருசித்து உள்ளதால் சிவகார்த்திகேயன் சந்தோஷத்தில் இருந்தாலும் அயலான் படம் தாமதமாககுவது அவருக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.