தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சமீபத்தில் வித்தியாசமான கதை களம் உள்ள திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடப்பதன் மூலமாக ரசிகர் மத்தியில் வெகுவாக பிரபலமாகி வருகிறார்.
ஆனால் அப்படி ஆசைப்பட்டதால் இவர் சீமராஜா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை ஏனெனில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைப்படமாக அமைந்தது தான் இதற்கு காரணம்.
தற்போது காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் சிவகார்த்திகேயன் டான் என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் படக்குழுவினர்கள் இறங்கியுள்ளார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது இதற்கு முக்கிய காரணம் இரண்டு ஹீரோக்கள் நடித்ததுதான் என கூறி வருகிறார்கள் அந்தவகையில் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த வினை முக்கிய பங்கு வகிக்கிறார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள சிங்கபாதை என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பல்வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது ஆனால் பலரும் இதற்கு சம்மதிக்கவில்லை இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹிந்தியில் உள்ள பிரபல நடிகரை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.
மேலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் அந்த நடிகர் மட்டும் சம்மதித்து விட்டால் இந்த படமும் இரண்டு நடிகர்கள் உள்ளதன் காரணமாக கண்டிப்பாக இத்திரைப்படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என கூறி வருகிறார்கள்.