சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி நல்ல வசூலை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ரஜினி இளம் இயக்குனர் நெல்சன் உடன் கோர்த்து தனது 169வது திரைப்படத்தில் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் சென்றடைந்தது.
நெல்சன் கடைசியாக விஜயை வைத்து பீஸ்ட் எனும் திரைப்படத்தை எடுத்து இருந்தார் இந்த படம் மக்கள் எதிர்பார்த்தபடி அமையாததால் பலரும் நெல்சன் மேல் சற்று வருத்தத்தில் உள்ளனர் அதனால்தான் ரஜினியை வைத்து அடுத்து படம் இயக்க உள்ளதால் இந்த படம் எப்படி இருக்குமோ என ரஜினி மற்றும் மக்கள் என பலரும் அச்சத்தில் இருக்கின்றன
மேலும் நெல்சனும் ரஜினியை வைத்து படம் எடுப்பதால் கதை சிறப்பாக இருக்க வேண்டுமென கதையை தீவிரமாக உருவாக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்த படத்திற்கான நடிகர் நடிகைகளை தேர்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தலைவர் 169 திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், பிரியங்கா அருள்மோகன் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது . இந்த நிலையில் படத்தில் இணைய உள்ள மற்றொரு பிரபல குறித்தும் தற்போது தகவல் வந்துள்ளது .
அதன்படி இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடிக்கப் போகிறார் என வெளிவந்துள்ளது இந்த படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சியில் தான் சிவகார்த்திகேயன் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கப் போவதாக கூறப்படுகின்றன