நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது செம சந்தோஷத்தில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் படங்களின் வசூலுக்கு நிகராக சிவகார்த்திகேயனின் படங்களும் அண்மை காலமாக நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.
அப்படி டாக்டர், டான் போன்ற இரு படங்களுமே 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது அனுதீப் இயக்கத்தின் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருவதால் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் கையில் அயாலன் போன்ற ஒரு சில படங்கள் இருக்கிறது. அந்த வகையில் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் இந்த படத்திற்கு ஹீரோயினாக சாய் பல்லவி கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மடோனா அஸ்வின் இயக்கத்திலும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் இணைய உள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் ப்ரோமோ வீடியோக்கள் கூட எடுக்கப்பட்டதாம். இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்திற்கு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரே அத்வானி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
அவர் தற்போது தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அதனால் இந்த படத்திற்கு சம்மதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் சிவகார்த்திகேயனின் இந்த படத்திற்கு வில்லனாக இயக்குனர் மிஸ்கின் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.