தமிழ் சினிமாவில் அஜித், விஜய், தனுஷ், சிம்பு போன்ற பலரும் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ஒரு நிரந்தர ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நிலையில் சினிமாவில் என்ரீயான ஒரு சில திரைப்படங்களில் மக்கள் மத்தியில் அதிக அளவு இடம் பிடித்த நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் சினிமாவில் மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அடுத்து இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர் திரைப்படம் உலக அளவில் அதிக வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்து சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு சிறந்த படமாக மாறியது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இவர் அயாலன், டான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, மிர்ச்சி விஜய் மற்றும் சிவாங்கி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ஒரு சில பாடல்கள் கூட சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் செம ட்ரெண்ட் ஆகியதை அடுத்து படம் வருகின்ற மே 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் குறித்து ஒரு தகவலை கூறி உள்ளார். அவர் கூறியது இந்த படத்தில் சிவகார்த்திகேயன் 17 வயது பையனாக நடித்துள்ளார். அதற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார் எனவும் கூறியுள்ளார்.