விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் பல நடிகர்கள் கொடிகட்டி பறந்து வருகிறார். அந்த வகையில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி ஷோ மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் .
பிறகு நீண்ட வருடங்களாக தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவரின் பேச்சு திறமை மற்றும் காமெடி திறமையை பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என்று அனைவரும் இவரின் ரசிகர்களாக மாறினார்கள்.
அதன் பிறகு தொடர்ந்து வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் ஒன்று தான் மனம் கொத்தி பறவை இத்திரைப்படம் இளசுகளின் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது தொடர்ந்து பல முன்னணி நடிகைகளுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தற்போது சினிமாவில் உள்ள அஜித், விஜய்,சூர்யா போலவே இவரும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் டாக்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் சில மாதங்களாக இப்பொழுது வெளியாகும் அப்பொழுது வெளியாகும் என்று தேதியை மாற்றி கொண்டே போகிறார்கள்.
அந்த வகையில் மார்ச் 23ஆம் தேதி வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட குளறுபடி காரணத்தால் மே மாதம் விடுமுறை நாளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறியிருந்தார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலையில் தற்போது 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே தியேட்டர்களில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இது ஒருபுறமிருக்க எந்த படமும் ரிலீஸ் ஆகாமல் இருக்கும் பொழுது சோலோவாக வந்தான் ஓரளவிற்கு வசூல் வேட்டை அடையும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் முன்னணி நடிகரான விஜய் ஆண்டனியின் படம் கோடியில் ஒருவன் திரைப்படம் மே மாதத்தில் ரம்ஜானை முன்னிட்டு வெளியாக உள்ளது.
எனவே இந்த இரண்டு படங்களும் ஒன்றாக ரிலீசானால் வசூல் ரீதியாக சிவகார்த்திகேயன் படம் குறைந்து விடுமோ என்று யோசித்து வருகிறார்கள். டாக்டர் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தின் மூலம் பிரியங்கா மோகன் என்பவர் தமிழ் சினிமாவிற்கு புதிதாக அறிமுகமாக உள்ளார்.