தனுஷுக்கு டாட்டா காட்டிய சிவகார்த்திகேயன் பட நடிகை – உடனே 18 வயது நடிகைக்கு கொக்கி போட்ட படக்குழு.? யார் அது தெரியுமா..

dhanush
dhanush

நடிகர் தனுஷ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்பத்தில் அவர் நடித்த பல படங்கள் தோல்வி படமாக அமைந்தாலும் தனது விடா முயற்சியின் காரணமாக தொடர்ந்து படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்காக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து.

டாப் நடிகர்களில் ஒருவராக மாறி தற்போது சிறப்பாக சினிமாத்துறையில் பயணித்து வருகிறார் தனுஷ்.  மேலும் இவரது பல படங்கள் வெற்றி அடைந்தாலும் சில படங்கள் அப்பப்போ தோல்வியைத் தழுவி வருகின்றன. அந்த வகையில் சமீபகாலமாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றதையடுத்து..

தற்போது தனுஷ் ஒரு நல்ல படத்தை மக்களுக்காகவும் ரசிகர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் நடித்துவருகிறார்.அந்த வகையில் தற்போது தனுஷ் வாத்தி, நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்களை தொடர்ந்து ராக்கி, சாணி ஆயுதம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் பில்டர் என்ற படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இணைய உள்ள இப்படத்தில் ஹீரோயினாக முதலில் ரசிகர்கள் பலரின் கனவு கன்னியாக வலம் வரும் பிரியங்கா அருள் மோகனை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது

பின்பு அவரது கால்சீட் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கில் மிக பிரபலமான நடிகையாக வலம் வரும் 18 வயது இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க வைக்கவும் படக்குழு திட்டமிட்டு வருகிறது. கீர்த்தி ஷெட்டி தற்போது சூர்யாவின் 41வது படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.