என்னதான் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் ஒரு சில நடிகர்கள் கம்மியான சம்பளத்தை தான் வாங்குகிறார்கள் ஆனால் சினிமாவிற்கு வந்த 2,3 வருடத்திலேயே இருபது கோடி 22 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் தான் சிவகார்த்திகேயன்.
இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தாலும் முதலில் காமெடி கலந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்து அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தற்போது தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டார் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக அதிக வசூல் செய்து சாதனை படைத்தது மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் கும்பலாக பார்க்கும் படியாக தான் அமைகிறது.
என்னதான் சிவகார்த்திகேயன் கோடி கோடியாக சம்பளம் வாங்கினாலும் தற்போது யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவருக்கு சுமார் 70 கோடிக்கும் மேல் கடன் உள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது இதில் சிவகார்த்திகேயன் ஒரு கால கட்டத்தில் தன்னுடைய மேனேஜர் ஆர் டி ராஜா என்பவருடன் கைகோர்த்து மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
ஆம் அந்த வகையில் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் என்றால் ரெமோ,சீமராஜா, வேலைக்காரன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானதாம் ஆனால் இந்த திரைப்படங்கள் எதுவுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை.
மேலும் ஆர் டி ராஜா தயாரித்த படங்கள் அனைத்துமே சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில் தயாரித்ததாகவும் அப்போது பல தகவல்கள் கிளம்பியதாம் அதுமட்டுமல்லாமல் அந்த திரைப்படங்களில் நடித்தது எனக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்தது.
அதனால் நானே மொத்த கடனையும் ஏற்றுக் கொள்கிறேன் என கூறிய சிவகார்த்திகேயன் தற்போது பல திரைப் படங்களில் கமிட்டாகி அந்த கடன்களை அடைத்து வருகிறாராம்.இந்த மூன்று திரைப்படங்களின் மொத்த கடன் 70வது கோடி என்பது குறுப்பிடத்தக்கது.