மீண்டும் உருவாகப் போகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்..! ஆனால் கதாநாயகன் சிவகார்த்திகேயன் இல்லையாம்..!

varuththapadatha-valibar-sangam
varuththapadatha-valibar-sangam

சிவகார்த்திகேயனின் வாழ்க்கை வரலாற்றில் மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.  இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது சிவகார்த்திகேயனின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்துவிட்டது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி நடிகர் சூரியும் நடித்துள்ளார் இவ்வாறு இவர்கள் இத் திரைப்படத்தில் நடித்த காட்சிகள் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து  இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் சீமராஜா போன்ற பல்வேறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் இயக்குனர் பொன்ராம் இந்த திரைபடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க மாட்டார் என தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகர் யாரேனும் ஒருவரை வைத்து தான் திரைப்படத்தை இயக்க வேண்டும் என போடுடா வெடியை என  வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சசிகுமாரை வைத்து எம்ஜிஆர் மகன் என்ற ஒரு திரைப்படத்தை  இயக்குனர் பொன்ராம் இயக்கிய நிலையில் இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருப்பது மட்டுமில்லாமல். இப்படத்தை பொன்ராம் இயக்குவார் என அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

varuththapadatha-valibar-sangam
varuththapadatha-valibar-sangam