தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்பொழுது இவர் நடிப்பில் டாக்டர் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இவர் சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு தனது கடின உழைப்பால் வெள்ளித்திரையில் பிரபலமடைந்தார் அதனால் இவருக்கு பல ரசிகர்கள் உருவானார்கள்.
அந்த வகையில் தற்பொழுது இவர் சில வருடங்களாகத் தான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் முன்னணி நடிகர்களான அஜித்,விஜய் அளவிற்கு வளர்ந்துள்ளார். எனவே சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இவரை பற்றிய செய்தி வந்தாலும் அவற்றை ட்ரெண்டிங்காக்கும்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் சிவகார்த்திகேயனை SK என்று அன்புடன் அவரின் ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். இவ்வாறு SK என்று கூப்பிடுவது சிவகார்த்திகேயனுக்கும் பிடித்துள்ளது. அந்த வகையில் சிவகார்த்திகேயனும் டைட்டில் கார்டில் SK என்று போட்டு விட்டு அதற்குப் பிறகுதான் சிவகார்த்திகேயன் என்று போடுவாராம்.
அந்த வகையில் ரெமோ திரைப்படத்தில் இருந்து தான் சிவகார்த்திகேயன் SK என டைட்டில் கார்டில் போட ஆரம்பித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழையும் தாண்டி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தீப் கிஷனையும் அவருடைய ரசிகர்கள் Sk கூற ஆரம்பித்துள்ளார்கள்.
சந்தீப் கிஷன் மாநகரம், யாருடா மகேஷ் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து தமிழில் பிரபலமானார் mஇவர் தமிழை விட தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவரின் 28 திரைப்படத்தின் போஸ்டர் அறிவிப்பு இன்று வெளியானது.
இதனை இவரின் ரசிகர்கள் #SK28 எனக் கொண்டாடி வந்தார்கள். இதனைப் பார்த்த சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் புதிய படம் என்று நினைத்து கொண்டாடி வந்தார்கள் அதன் பிறகுதான் தெரிந்தது சந்தீப் கிஷனின் திரைப்படம் என்று.