தமிழ் சினிமாவில் பிற மொழி நடிகைகள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் பிரியங்கா மோகன் தமிழில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.அந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பல்வேறு டாப் நடிகர்கள் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அந்த வகையில் பிரியங்கா மோகன் .பண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் எதற்கும் துணிந்தவன் திரை படத்தில் நடித்து வருகிறார்.அதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் டான் திரைப் படத்திலும் நடிக்கிறார் இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி எடுத்து வருகிறார்.
புதுமுக நடிகைகளுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு ஆரம்பத்தில் கிடைக்கும் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் தான் சில வருடங்கள் சினிமாவில் பயணிக்க முடியும்.அதை தற்போது இவரும் கடைபிடித்து உள்ளதால் தற்போது வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் பிரியங்கா மோகனிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் இந்தியாவிலேயே உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் எனக்கு எப்பொழுதும் பிடித்த ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று கூறினார்.
அவரது ஸ்டைல் மற்றும் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அவருடன் பணியாற்ற மிக ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.பிரியங்கா மோகன் சினிமாவுலகில் முக்கியத்துவம் உள்ள படங்கள் எடுப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவதோடு வருகின்ற படங்களிலும் நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் நிச்சயம் நல்ல இடத்தை பிடிப்பேன் என உறுதியாக இருக்கிறாராம் பிரியங்கா மோகன்.