தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து முன்னணி நடிகருக்கான அந்தஸ்தைப் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது அதுமட்டுமில்லாமல் இவர் குழந்தைகளை மிக விரைவாக கவர்ந்து விட்டார்.
அதனால் குழந்தைகளும் இவருக்கு ரசிகர்கள் தான். தற்பொழுது குறிப்பிட்ட முன்னணி நடிகர்களுக்கு இணையாக அதிக மார்க்கெட் பிடித்த நடிகராக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாக சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படங்கள் 80 கோடிக்கு மேல் வியாபாரம் செய்து வருகிறது.
சமீபகாலமாக மேலும் சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்திற்கு சுமார் 22 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் ஆனாலும் இன்னும் சிவகார்த்திகேயன் கடன் நெருக்கடியால் சிக்கித் தவித்து வருகிறார் என அவரே பல பேட்டிகளில் கூறி நாம் கேட்டிருப்போம்.
சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்து வருகிறார். படத்தில் நடித்தால் இவருக்கு லாபம் கிடைத்திருக்கும் ஆனால் தன்னுடைய நண்பர்கள் பெயரிலும் தன்னுடைய மேனேஜர் பெயரிலும் அதிக அளவு பணத்தை போட்டு படத்தை தயாரித்து வருகிறார் அதனால்தான் இவ்வளவு கடனுக்கும் காரணம் என பிரபல இணைய தளமான டூரிங் டாக்கிஸ் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த ஹீரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் சிவகார்த்திகேயன் விட்ட இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என மிகவும் வைராக்கியத்தில் இருக்கிறார். பொதுவாக நடிகர்கள் நடிப்பதை மட்டும் பார்த்தாலே அவர்களுக்கு வெற்றிதான் ஆனால் சைடில் படுத்தை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அது அவர்களுக்கு மேலும் மேலும் சிக்கலை ஏற்படுத்தி அதன் வழியாக நஸ்ட்டமும் அடைந்து ருகிறது என்பதே உண்மை.