சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்துக்கொண்டு பயணித்தால் மட்டுமே சினிமாவில் நீண்ட தூரம் பயணித்து மென்மேலும் தொடர்ந்து ஹிட் படங்களையும் கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன்பாக சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், காமெடியனாகவும் இருந்து மக்களின் மனதை சரியாக புரிந்து கொண்டு எப்படி சிவகார்த்திகேயன் பயணித்தார்.
அதுபோல வெள்ளித்திரை எப்படி என்பதை சரியாக கணித்து அதற்கு ஏற்றவாறு தனது கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் சமீப காலத்தில் படங்கள் ஒவ்வொன்றும் மெகா ஹிட் படங்களாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் படங்களுக்கு மக்கள் கூட்டம் அலை மோதுவதால் வசூல் வேட்டையும் பெரிய அளவு நடத்தப்படுகின்றன.
இதனால் ஒவ்வொரு படம் ஹிட் அடிக்கும் போதும் தனது சம்பளத்தை படிப்படியாக ஏற்றி வருகிறார் சிவகார்த்திகேயன் இதுவரை ஒரு படத்திற்கு 20 அல்லது 25 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் கடைசியாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் கைகோர்த்து டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட்அடுத்தது போதாத 100 கோடி வசூல் அள்ளியது.
இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் செம்ம சந்தோஷத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் தனது சம்பளத்தை திடீர் என உயர்த்தியுள்ளனர் தகவல்கள் தெரிவிக்கின்றன இனி சிவகார்த்திகேயன் ஒரு திரைப்படத்திற்கு 30 கோடி சம்பளம் வாங்கும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இவரது நடிப்பில் அடுத்தடுத்து அயாலன் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் கிட்டத்தட்ட நடிகர் சூர்யாவின் சம்பளத்துக்கு கிட்ட நெருங்கி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் இச்செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது இப்படியே போய்க் கொண்டிருந்தால் சிவகார்த்திகேயன் தொடமுடியாத ஒரு உச்சத்தை எட்டுவதோடு மட்டுமல்லாமல் டாப் நடிகர்கள் சம்பளத்தை கூட இவர் கைப்பற்றினாலும் கைப்பற்றுவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.