சினிமா உலகில் அதிக பிரச்சினையை சந்திப்பவர் சிவகார்த்திகேயன்.? மறைமுகமாக உண்மையை சொன்ன பிரபல இயக்குனர்.

sivakarthikeyan
sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், காமெடியனாகவும் முதலில் வலம் வந்தவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அப்போதே தனக்கு கொடுக்கப்பட்ட ரோலில் சீரும் சிறப்புமாக நடிக்க வேண்டும். அந்த ரோல் மக்களிடையே சிரிப்பை வர வைக்க வேண்டும் என்பதை நன்கு உனது இருந்தார்.

அதையே இப்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து சிவகர்த்திகேயன் செய்து வருவதால் இவரது படங்கள் மக்களுக்கு ரொம்ப பிடித்த போகின்றன அதன் காரணமாக படங்கள் ஹிட் அடிக்கின்றன. அண்மையில் கூட நெல்சன் உடன் இணைந்து டாக்டர் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ஆக்சன், காமெடி கலந்த திரைப்படமாக உருவானது.

இந்த படமும் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஆக்ஷன், காமெடி கலந்த படங்களிலேயே நடித்து வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் கையில் டான், அயலான் ஆகிய படங்கள் இருக்கின்றன. இதில் முதலாவதாக டான் திரைப்படம் வெளியாக இருக்கிறது அதனை தொடர்ந்து அயலான் படம் வெளியாகும் என தெரிய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அயலான் படத்தை இயக்கிய ரவிகுமார். நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து அண்மையில் பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது. அயலான் திரைப்படம் ஒரு சின்ன பட்ஜெட் படம் கிராபிக்ஸ் அதிகமாக இருக்கும்.  அயலான் படம் நிச்சயம் சிவகார்த்திகேயனின் வெற்றி படங்களின் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம் அந்த அளவிற்கு சிறப்பாக வந்துள்ளது.

சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் கவனிப்பாக செய்வார். பட யூனிட்டில் எல்லோரையும் தாங்கிப்பிடிக்கும் ஒரு ஆளாக சிவகார்த்திகேயன் இருப்பார். சிவகார்த்திகேயன் தோல்வியை எப்போ தழுவுகிறாரோ அந்த நேரத்தில் அதை பற்றி நிறைய யோசிப்பார். அவரிடம் இருந்து பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டுள்ளேன் குறிப்பாக தோல்வியில் இருந்து எப்படி மீண்டு வர வேண்டும் என்பது நன்றாகவே கற்று கொண்டேன் என கூறினார்.