நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மைக்காலமாக வெளிவரும் படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் எதிர்பாராத அளவு வரவேற்பை பெற்று நல்ல வசூலை அள்ளுகின்றன. அந்த வகையில் டாக்டர், டான் இரு படங்களும் 100 கோடிக்கு மேல் வசுலை அள்ளி புதிய சாதனை படைத்தது.
இந்த படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் முன்பெல்லாம் ஒவ்வொரு படமாக காமிட் ஆகி நடித்து அந்த படம் வெளிவந்த பிறகு அடுத்த படத்தில் கமிட்டாகுவார். ஆனால் தற்போது தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் நடிக்க கால் சீட் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தின் நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வந்துள்ளன. இதைத்தொடர்ந்து கமலின் ராஜ்கமல் ஃபிலிம் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம், மடோன் அஷ்வின் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் மாவீரன் என்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தடுத்த படத்தில் நடிப்பார் என தெரிய வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புதிய லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்த பலரும் மாவீரன் படத்தின் கெட்டப் புகைப்படமா.. எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் பிரின்ஸ் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் இந்த கெட்டபில் நடிக்க இருக்கிறாரா என ரசிகர்கள் பலரும் குழம்பி வருகின்றனர். சிவகார்த்திகேயனின் படம் அப்டேட் எதுவும் குறிப்பிடாமல் வெறும் புகைப்படம் மட்டும் வெளி வந்ததால் ரசிகர்களை சற்று வருத்தமடைய செய்துள்ளது. இதோ அந்த புகைப்படம்.