தமிழ் சினிமா உலகில் அண்மைகாலமாக டாப் ஹீரோக்களின் படங்களில் பிறமொழி நடிகைகள் தான் நடித்து வருகின்றனர் அந்த வகையில் மாளவிகா மோகனன் தொடர்ந்து பிரியங்கா அருள் மோகன் தொடர்ந்து தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
இவர் கன்னட சினிமாவின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்த இருந்தாலும் தமிழில் தற்போது ஏகப்பட்ட வாய்ப்பு பிரியங்கா அருள் மோகனுக்கு கிடைக்கிறது. தமிழில் எடுத்த உடனேயே சிவகார்த்திகேயனுடன் கைக்கொடுத்து டாக்டர் திரைப்படத்தில் நடித்தார் முதல் படத்திலேயே இவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது மேலும் படமும் 100 கோடி கிளப்பில் இணைந்தது.
இதனால் இவரது பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார் இந்த படத்திலும் இவரது நடிப்புக்கு கை ஓங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்தார் இந்த படமும் 100 கோடி கிளப் வரிசை இடம் பிடித்தது.
இதனால் பிரியங்கா அருள் மோகனின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வெற்றியைக் கண்டு வந்தாலும் தனது சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது இப்போ ஒரு படத்திற்காக பிரியங்கா அருள்மோகன் 50 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம்.
மற்ற நடிகைகள் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்தாலே போதும் கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்த ஒரு மத்தியில் பிரியங்காவின் சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தில் அவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், கிளி அரவிந்தன் கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு வருடம் கிங்ஸின் மற்றும் பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.