தமிழ் சினிமாவின் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் கதாநாயகனாக நடித்த அறிமுகமான திரைப்படம் தான் மெரினா இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய மாபெரும் வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தினை இயக்குனர் பாண்டியராஜ் அவர்கள் தான் இயக்கியிருந்தார்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மான் கராத்தே நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சமீபத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வளர்ந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் சமீபத்தில் டாக்டர் டான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் நடித்துள்ளார் அந்த வகையில் இந்த இரண்டு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்தது.
மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் சரி சுமார் 100 கோடிக்கு மேலாக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு திரைப்படத்தின் வசூலைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்ந்தது மட்டுமில்லாமல் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜ் அவர்கள் சமீபத்தில் சிவகார்த்திகேயனாக ஒரு கதையை எழுதி தயார் செய்து அவற்றை சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளாராம் ஆனால் சிவகார்த்திகேயன் இந்த கதையை முழுமையாக கேட்டு விட்டு கதையெல்லாம் நல்லா தான் இருக்கு ஆனால் என்னால் இப்பொழுது கால்ஷீட் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.
பொதுவாக தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனை துணிந்து அறிமுகப்படுத்தியது நமது பாண்டியராஜ் இயக்குனர் தான் அதே போல இவர் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக நினைத்துக் கொண்டிருக்கும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்களையும் இவர் தான் இயக்கி வெற்றி கண்டார் அந்த வகையில் தற்பொழுது தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்காமல் நடிகர் சிவகார்த்திகேயன் செய்வது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.