தளபதி விஜய்யை அவமானப்படுத்திய சிவகார்த்திகேயன்.! இணையத்தில் வைரலாகும்..

sivakarthikeyan-vijay
sivakarthikeyan-vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கிய வருகிறார். இந்த படத்தின் பட பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் உள்ளதாகவும் இந்த படத்தில் சண்டை காட்சிகள் மற்றும் நடன காட்சிகள் மட்டும் மீதம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்துவிடும் என்றும் விரைவில் அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது இந்த நிலையில் நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படம் முடிந்ததும் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 குறித்து அதிகாரபூர் அப்டேட் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் நடிகர் விஜயை தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு மேடையில் அசிங்கப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமாவில் வருவதற்கு முன்பு விஜய் டிவியில் ஆங்கர் வேலை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் மிமிக்கிரி செய்து வந்தார் அப்போது நடிகர் விஜய் போலவே மிமிக்ரி செய்து அவரை அசிங்கப்படுத்தி உள்ளார் அதாவது அந்த மேடையில் விஜய் போல பேசியபோது முதலில் கதையை நன்றாக தேர்ந்தெடுங்கள் என்று அவரை அசிங்கப்படுத்தி பேசுகிறார்.

இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கழுவி ஊற்றி வருகின்றனர். சிவகார்த்திகேயன் அவர்கள் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம்  சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது இந்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.