ஜீவா நடித்திருந்த சிவா மனசுல சக்தி படத்தில் சிவகார்த்திகேயனா.! வெளிவந்த மாஸ் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ஜீவா. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படங்களும் இருக்கிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கும் வசனங்கள் தற்பொழுது வரையிலும் பிரபலமாக இருந்து வருகிறது அந்த வகையில் ஜிவா மற்றும் சந்தானம் இவர்களின் கூட்டணி மிகவும் சிறப்பாக அமைந்தது. இவர்களின் கூட்டணியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் சிவா மனசுல சக்தி.

இத்திரைப்படத்தில் தனது சந்தானமும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதோடு இடம்பெற்றிருந்த ஒவ்வொரு காமெடியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அந்தவகையில் ஒரு குவாட்டர் சொல்லும் வச்சி காமெடி தான் பிரபலமாக இருந்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில் ஜீவா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் இந்த டயலாக்கை சொல்லுமாறு ரசிகர்கள் பலர் கேட்டு வந்தார்கள்.

அந்த வகையில் இவர்களும் பல நிகழ்ச்சிகளிலும் சகிக்காமல் இந்த வசனத்தை கூறிவிட்டார் இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் 2வது பாகத்தை பற்றிக்கூட கூறி இருந்தார்கள் ஆனால் தற்போது அதனை பற்றி  எந்த முடிவும் எடுக்கவில்லை.இவ்வாறு காமெடி கலாட்டா நிறைந்த இத்திரைப்படத்தை ராஜேஷ் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தை பற்றிய சிறிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது .அதாவது திரைப்படத்தில் அடங்காப்பிடாரி என்ற ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும் அதன் இடையில் ரஜினி, ஜீவா குரலில் வசனம் ஒன்று வரும் இந்த வசனத்தில் சிவகார்த்திகேயன் நான் நடித்துள்ளார் தகவல் சமீபத்தில் தெரியவந்துள்ளது.