தனுஷ் பட இயக்குனரால் உச்சகட்ட மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்.!

sivakarthikeyan
sivakarthikeyan

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் கொஞ்சம் கூட சுறுசுறுப்பு குறையாமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த நடிகர்களுக்கும் உதாரணமாக திகழ்ந்தவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு வயதானாலும் கூட தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் வயதாக ஆக திரைப்படங்களில் நடிக்க முடியாது என்பதை அறிந்து ரஜினி இந்த வருடத்திற்குள் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து விட வேண்டும் என்று மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.  ஏனென்றால் தற்பொழுது ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்திற்கு நூறு கோடி சம்பளம் வாங்குகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் பட சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு அடுத்ததாக மற்றொரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர்களை தேர்வு செய்து வந்தார்.

அந்த வகையில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் தற்பொழுது ரஜினியின் அடுத்த திரைப்படத்தை தனுஷின் திரைப்படத்தை இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு அடுத்து திரைப்பட வாய்ப்பை கொடுத்துள்ளாராம்.

அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியிடம் ஒரு கதையைக் கூறி அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் தனது அடுத்த படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்றும் கூறிவிட்டாராம்.

எனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனரை தனது அடுத்த படத்தை இயக்கவேண்டும் என்று சிவகார்த்திகேயன் பல மாதங்களாக கொக்கி போட்டு வந்தார். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு இந்த தகவல் மிகவும் மகிழ்ச்சி தரும் ஒன்றாக அமையும். எனவே தற்போது ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு இனிமே குஷி தான் என்று கிசுகிசுத்து வருகிறார்கள்.