தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்த நாளிலிருந்து மக்களை கவரும் படியான காமெடி கலந்த திரைப்படங்களை கொடுத்து மிக வேகமாக வளர்ந்து உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மைக்காலமாக வெளிவரும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூலை அள்ளி குவிக்கிறது.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் பிரின்ஸ், அயலான், மாவீரன் போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இதில் முதலில் அவர் நடித்து வரும் பிரின்ஸ் படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகும் எனப்பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுதீப் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது.
அதற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதல் முறையாக உக்ரேன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது.
அதுபோலவே தற்போது பிரின்ஸ் திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் படம் அந்த அளவிற்கு சிறப்பாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் படங்களுக்கு பெரும்பாலும் அவரே டப்பிங் கொடுப்பது வழக்கம் அது போல் தெலுங்கிலும் வெளியாக இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்திற்கும் சிவகார்த்திகேயன் டப்பிங் கொடுக்க உள்ளாராம்.
இதற்காக சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கில் சரளமாகவும் மிகத் தெளிவாகவும் பேசக்கூடிய நுட்பங்களை கற்றுக் கொண்டு வருகிறார். கூடிய விரைவில் தெலுங்கில் பேச கற்றுக்கொண்டு டப்பிங் கொடுப்பார் என கூறப்படுகிறது.