நடிகர் சிவகார்த்திகேயன் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நாளிலிருந்து இப்பொழுது வரையிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் வெற்றியை ருசித்து வருகிறார் இவர் கடைசியாக நெல்சன் உடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் டாக்டர்.
இந்த படம் அப்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தியது மேலும் வசூலில் 100 கோடி அள்ளி புதிய சாதனை படைத்தது. அதே சந்தோஷத்துடன் அடுத்த படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன் ஒரு இளம் இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி உடன் இணைந்து டான் என்னும் படத்தில் நடித்தார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகொடுத்து பிரியங்கா அருள்மோகன் , எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, விஜய் டிவி பிரபலம் சிவாங்கி மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்த அசத்தி இருந்தனர். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
வசூலில் எந்த குறையும் வைக்காமல் அடித்து நொறுக்கியது இதுவரை சிவகார்த்திகேயனின் டான் படம் 106 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. வரும் சனி ஞாயிறுகளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என கூறப்படுகிறது தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருவதால் பல்வேறு நடிகர்களில் சாதனையை முறியடித்து அசத்துகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் ரஜினி கமல் அஜீத் என எந்தவொரு நடிகரும் செய்யாத சாதனையை நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் செய்து அசத்தி உள்ளது.
அறிமுக இயக்குனர் உடன் கைகோர்த்தது எந்த ஒரு நடிகரின் படமும் 100 கோடி வசூல் செய்தது கிடையாது. முதல் முறையாக சிவகார்த்திகேயன் டான் படம் செய்து உள்ளது இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கி வெற்றி பெற்றுள்ளார்.