மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியானது பல தடைகளுக்கு நடுவில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்து வரும் நிலையில் மேலும் இந்த படத்தில் சரிதா, மிஸ்கின் யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கின்றனர்.
கலகலப்பாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின் இவர்களுக்கு இடையேயான காட்சி சிறப்பாக இருப்பதாகவும் மேலும் ஆக்சன், லவ் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அப்படி இந்த படத்தின் முதல் காட்சியை படக்குழுவினரோடு சங்கீதா விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து பார்த்து வருகின்றனர். இந்நிலையில் மாவீரன் திரைப்படம் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக படக்குழு ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அதற்காக சிவகார்த்திகேயன் மலேசியா சென்றார்.
அங்கு போலீஸார்களிடம் மாட்டிய அசிங்கப்பட்டு இருப்பது குறித்த தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. பிளைட் பிடித்து போய் அசிங்கப்பட்டு வந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதாவது, மாவீரன் பட ப்ரொமோஷனுக்காக மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டுக்கு செல்லலாம் என குழு முடிவெடுத்து இருந்தது. அந்த வகையில் மலேசியாவில் ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி தான் அந்த ப்ரோமோஷன் விழாவை நடத்தி இருக்கிறது.
ஆனால் அந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி சிவகார்த்திகேயனுக்கு டூரிஸ்ட் விசாவை கொடுத்ததான் வர வைத்துள்ளனர். பிக்கப், டிராப்க்கு கூட கார் அனுப்பாமல் ஒரு சாதாரண மனுஷன் மாதிரி சிவகார்த்திகேயன் அங்கு சென்றுள்ளார். பிறகு மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சிவகார்த்திகேயனை 30 பேர் கொண்ட மலேசிய போலீஸ் படையினர் சூழ்ந்து அவரை மிரட்டி மேடையில் இருந்து கீழே இறங்க வைத்துள்ளனர்.
இதற்க்கு காரணம் என்னவென்றால் டூரிஸ்ட் விசாவில் வந்தவங்க இந்த மாதிரி எல்லாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என மலேசியாவில் ஒரு ரூல்ஸ் உள்ளதாம் இது தெரியாத சிவகார்த்திகேயன் அங்கு சென்று அவமானப்பட்டுள்ளார். இதுபோன்ற சிவகார்த்திகேயன் போல் எந்த ஒரு நடிகரும் அவமானப்படவில்லை என கூறப்படுகிறது.