சிவகார்த்திகேயன் தொடர்ந்து காமெடி காதல் ஆக்சன் என அனைத்தும் கலந்த கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதால் தொடர்ந்து அவரது படம் வெற்றியை பதிவு செய்கிறது கடைசியாக வெளிவந்த டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளின.. இதை தொடர்ந்து வந்த பிரின்ஸ் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டாலும்..
படம் மோசமான விமர்சனத்தை பெற்றது இதனை அடுத்து ஒரு நல்ல ஹிட் படத்தை கொடுக்க மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படம் ஹிட் அடிக்கும் பட்சத்தில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அசுர வளர்ச்சியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போ இவருடைய வளர்ச்சி அதிகமாக இருந்தாலும் ஆரம்பத்தில் ரொம்பவும் தட்டு தடுமாறிக் கொண்டுதான் இருந்தார் அந்த சமயத்தில்தான் தயாரிப்பாளர் மதன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மான்கராத்தே என்னும் படத்தை எடுத்தார் இந்த படம் அப்பொழுது வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
சிவகார்த்திகேயன் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகினாலும் ஹீரோயின் ஆக யாரை நடிக்க வைக்கலாம் என தேடிக்கொண்டிருந்தது அந்த சமயத்தில் தான் ஹன்சிகாவை தேர்வு செய்தனர் ஆனால் அவரோ முன்னணி நடிகை என்பதால் அதிகம் சம்பளம் கேட்க ஒரு வழியாக இரண்டு மடங்கு சம்பளம் கொடுத்து கமிட் செய்தார். பின்பு சிவகார்த்திகேயனுக்கு சம்பளமாக 50 லட்சம் கொடுத்தார்..
படம் வெளிவந்து நல்ல லாபத்தை பெற்று தந்ததால் தயாரிப்பாளர் மதன் சிவகார்த்திகேயனுக்கு இன்னும் ஒன்றரை கோடி எக்ஸ்ட்ராவாக சம்பளம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய கார் ஒன்றையும் பரிசாக கொடுத்தார் அதுவும் சாதாரண கார் கிடையாது ஆடி சொகுசு கார் ஒன்றை அப்பொழுது கொடுத்து அழகு பார்த்தாராம்..
இப்படி மான் கராத்தே படத்திற்காக சிவ கார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட செலவு செய்த மதன் தற்பொழுது ரொம்பவும் பணக்கஷ்டத்தில் இருக்கிறாராம் இதனால் சிவகார்த்திகேயனிடம் தன் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் நடிக்க கேட்டுக் கொண்டு வருகிறார் ஆனால் இதற்கு பதில் அளிக்காமல் சிவகார்த்திகேயனும் எஸ்கேப்பாகி வருகிறாராம். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் இப்படி உங்களை வளர்த்து விட்ட ஒருவருக்கே நீங்கள் நாமத்தை போட பார்ப்பது ரொம்ப தவறு எனக்கூறி கமெண்டு அடித்து வருகின்றனர்.