நான்காவது ஹீரோவாக ஆகாயத்தில் மிதக்கிறார் சிவகார்த்திகேயன் – எஸ் ஜே சூர்யா விளக்கம்.!

sj-surya
sj-surya

நடிகர் சிவகார்த்திகேயன் அண்மைகாலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் குறிப்பாக டாக்டர் 100 கோடி வசூலில் புதிய சாதனை படைத்தது இதுவே சிவகார்த்திகேயன் முதல் 100 கோடியைத் தொட்ட படமாகப் பார்க்கப்பட்டது அதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் இணைந்து நடித்த திரைப்படம் டான்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி, எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள்மோகன், குக் வித் கோமாளி, சிவாங்கி மற்றும் பலர் நடித்து அசத்தினார். படம் வெளிவந்து  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 100 கோடி கிளப்பில் இணைந்து தொடர்ந்து சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள் 100 கோடியை தொட்டுள்ளது.

அவரது மார்க்கெட்டை அதிகரிக்க வைத்துள்ளது. டான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு அதை கொண்டாடியது. அதில் சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துகொண்டு அசத்தினார் அப்போது பேசிய நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா பேசியது.

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் ஒரு ஆகாயம் உண்டு. அதாவது பெரிய பெரிய ஹிட் படங்களை கொடுத்த நடிகர்கள் அந்த ஆகாயத்தில் இருப்பார்கள் அதன்பின் அவர்கள் வெற்றி தோல்வி என்ற கணக்கே கிடையாது அங்கேயே இருப்பார்கள்.

அப்படி தற்பொழுது 3 நடிகர்கள் அங்கேயே இருக்கின்றனர் நான்காவதாக சிவகார்த்திகேயன் போவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறார் ஆனால் டான் படத்தின் வெற்றிக்கு பிறகு அவரும் அங்கேயே சேர்ந்து ஆகாயத்தில் உட்கார்ந்து விட்டார். மீண்டும் அவர் கீழே இறங்க வாய்ப்பு இல்லை என சிவகார்த்திகேயனை பற்றியே பெருமையாக பேசி அசத்தினார் நடிகர் எஸ் ஜே சூர்யா.