சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் படங்கள் வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை சிறப்பான முறையில் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் அந்த வகையில் ரஜினி அஜித் விஜய் ஆகியோர் இதை பெரிதாக பின்பற்றி வருகின்றனர்.
மேலும் அந்த திரைப்படங்கள் பொங்கல் அல்லது தீபாவளி போன்ற நல்ல நாட்களில் தான் பெரிதும் வெளிவந்துள்ளது. அதுபோல இந்த வருடம் வருகின்ற தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. திரைப்படத்துடன் விஷால், ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள எனிமி திரைப்படம் மோத இருக்கிறது.
இது தவிர OTT தளங்களில் பல பெரிய நடிகர், நடிகைகள் படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படமும் மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி சமிபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் தான் இந்த முறை மோத இருக்கிறது.
ஆம் சிவகார்த்தியனின் டாக்டர் திரைப்படம் சன் டிவி தொலைக்காட்சியில் தீபாவளி அன்று 6:30 மணிக்கு வந்து மக்களை பெருமளவு கவர்ந்தால் ரஜினியின் அண்ணாத்த எனிமி ஆகிய திரைப்படங்கள் வசூலை கம்மியாக பெரும் என கூறப்படுகிறது.
அண்ணாத்த, எனிமே ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த நாட்கள் வேண்டுமானால் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என ஒரு தரப்பு ரசிகர்களும் கூறி வருக்கின்றனர். எதையும் உறுதியாக சொல்லிவிட முடியாது பொருத்து இருந்து பார்போம்.