சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று தற்போது அங்கு ருத்ர தாண்டவம் ஆடுகிறது இல்லையோ மற்ற நாடுகளை ஆட்டிப் படைக்கிறது.
அதில் ஒன்றாக இந்தியாவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது அதுவும் இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்துள்ளதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.
இருப்பினும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தாலும் ஒரு கட்டத்தில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் வர வேண்டிய சூழல் நிலவுகிறது இதனால் அப்பொழுது ஊரடங்கு தளர்த்தி வருகிறது அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு தளர்த்தி மக்கள் தேவையான பொருட்களை வாங்க அனுமதி செய்து தொடர்ந்து அடுத்த 14 நாட்களுக்கு யாரும் வெளியில் வராதபடி சரியான கிடுக்கிப்பிடி போட்டுள்ளது.
மேலும் பல தொழில்களும் மூடப்பட்டுள்ளன இதனால் மக்கள் மற்றும் சினிமா துறையைச் சார்ந்த சங்க உறுப்பினர்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர் இப்படியிருக்க தன்னால் முடிந்த உதவிகளை நடிகர் மற்றும் நடிகைகள் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஐம்பதாயிரம் கொடுத்தார் அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ஒரு லட்சம் கொடுத்து உள்ளார் மேலும் விக்னேஷ் பத்தாயிரம் இருபதாயிரம் தன்னால் முடிந்த காசோலைகளை கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.
மேலும் கொரோனா நீதிக்காகவும் பலர் தன்னால் முடிந்த காசோலைகளை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் சிவகார்த்திகேயன் 25 லட்சம் கொடுத்துள்ளார் மேலும் அஜித் ரஜினி போன்றோரும் தன்னால் முடிந்த தொகைகளை அள்ளிக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.