விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் சிவகார்த்திகேயன் இவர் தொகுத்து வழங்கிய பல நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த நிலையில் பல நடிகர் மற்றும் நடிகைகள் சினிமாவில் இருந்து தொலைக்காட்சிக்கு வருவார்கள் அதேபோல் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு பல நடிகர் நடிகைகள் செல்வார்கள் அந்த வகையில் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் தான்.
இவர் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் காமெடி கலந்த படங்களாக நடித்து ரசிகர்கள் மத்தியிலும் பெரியவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டார். அதேபோல் சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றாலே கண்டிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்கலாம் என்ற நிலைமை வந்தது. குழந்தைகளும் அந்த திரைப்படத்தை விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள்.
அதைபோல் சமீப காலமாக சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் வசூலில் மிகப்பெரிய வேட்டை நடத்தி வருகிறது அதுமட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுக்கு இணையாக இவர் திரைப்படம் வசூல் செய்து வருவதால் முன்னணி நடிகர்கள் கொஞ்சம் கலக்கத்தில் இருக்கிறார்கள் எங்கே நம் இடத்தை பிடித்து விடுவாரோ எனபயத்துடன் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வருடம் வெளியாகிய டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியை நிலை நாட்டியது டாக்டர் திரைப்படத்தை நெல்சன் டிலிப்குமர் தான் இயக்கினார் ஆனால் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் சந்தித்தது.
மிகக்குறைவான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் தற்பொழுது டான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. டான் திரைப்படம் வசூலில் எந்த குறையும் இல்லாமல் நல்ல வசூல் செய்து வருகிறது.
இதுவரை டான் திரைப்படம் தமிழ்நாட்டில் 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலைக் கடந்து வருகிறது உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 85 கோடிக்கு மேல் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வசூலில் அதிக வசூல் செய்து வருவதால் முன்னணி நடிகர்கள் கொஞ்சம் கலக்கத்தில் இருக்கிறார்கள் ஏனென்றால் இங்கே நம்முடைய இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்து விடுவாரோ என அச்சத்தில் இருக்கிறார்கள்.