சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் டான். மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வருகின்றன. நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஒரு சில படங்களையே ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்தார்.
மேலும் அவரது படங்களும் காமெடி கலந்து அமைவதால் அதனை மக்கள் பலரும் என்ஜாய் செய்து பார்த்து வருகின்றனர் அதனால் சிவகார்த்திகேயனுக்கு விரைவிலேயே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உருவாகின. அந்தவகையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படமும் மக்கள் மத்தியில் எதிர்பாராத அளவு வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது.
இந்த டாக்டர் படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சிவகார்த்திகேயன் கேரியரில் ஒரு முக்கிய படமாகப் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது திரையில் வெற்றி நடை கண்டு வரும் டான் திரைப்படமும் சிவகார்த்திகேயனுக்கு மற்றும் சிபிசக்கரவர்த்தி இருவருக்குமே ஒரு முக்கிய படமாகும் ஏனெனில் டான் திரைப்படம்.
வெளிவந்த 12 நாட்களிலேயே உலகமெங்கும் 100 கோடி வசூலித்ததை தொடர்ந்து நேற்று வரை டான் திரைப்படம் தமிழகத்தில் 82 கோடி வரை வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடிய விரைவிலேயே இந்த படம் தமிழகத்திலேயே 100 கோடி வசூலை அள்ளும் என்பது சாத்தியமாகும்.
இந்த நிலையில் டான் படம் தமிழகத்தில் இதுவரை 82 கோடி வசூலை அள்ளி வேதாளம், கபாலி, தெறி, ஐ, நேர் கொண்ட பார்வை போன்ற படங்களின் சாதனையை முறியடித்துள்ளது மேலும் இன்னும் டான் படம் தமிழகத்தில் அதிக வசூலை அள்ளி மற்ற ஹிட் படங்களின் சாதனையையும் முறியடிக்கும் எனத் தெரிய வருகிறது.