நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து காமெடி கலந்த படங்களில் நடித்து வெற்றியை ருசித்து வருகிறார். படங்களில் காமெடியாக நடித்தாலும் வியாபாரம் ரீதியாக ஒரு படம் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டுமோ அதை அனைத்தையும் சூப்பராக செய்து வருகிறார்.
இதனால் தான் அவரது படங்கள் பெரிதும் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. தொடர்ந்து வெற்றியை ருசிக்க ருசிக்க அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது, படத்தில் நடிக்க பல கண்டிஷன் போடுவது, இயக்குனர் கதையில் தலையிடுவதுமாக தற்பொழுது சிவகார்த்திகேயன் பண்ணி வருகிறாராம்.
அதற்கு உதாரணமாக ஆரம்பத்திலேயே அவர் அப்படி ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் வெளிவந்து சுமாரான வெற்றியை பெற்றது. அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவு மார்க்கெட் கூட இல்லை அந்த நேரத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்..
ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க அழைப்பு விடுத்தார் ஆனால் மிகப்பெரிய வாய்ப்பு என்று அன்று உணராத சிவகார்த்திகேயன். நான் இந்த கேரக்டரில் நடித்தால் வில்லன் கேரக்டரில் சத்யராஜ் இல்லை என்றால் சீனியர் நடிகர்கள் நடித்தால் மட்டுமே நடிப்பின் என முகத்தில் அடித்த வாரு கூறிவிட்டாராம்.
இதனால் கடுப்பான கார்த்திக் சுப்புராஜ் எந்த பதிலும் கூறாமல் இங்கிருந்து கிளம்பிவிட்டார் பின்னர் சிவகார்த்திகேயன் தேவை இல்லையா முடிவு செய்து அவருக்கு பதில் சித்தார்த்தை நடிக்க வைத்தாராம் மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவையே நடிக்க வைத்து படத்தை மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாற்றினார் கார்த்திக் சுப்புராஜ். அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தால் நிச்சயம் அப்பொழுது மிகப்பெரிய ஒரு மார்க்கெட்டை பிடித்திருக்கலாம் ஆனால் அதை அவர் தழுவ விட்டு விட்டாராம்.