சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசையில் பட்டையைக்கிளப்பும் டாக்டர் படத்தின் பாடல் வெளியீடு.!

doctor
doctor

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் ஹீரோ இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்ச்சனங்களை பெற்றது இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமார இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அயலான் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

டாக்டர் படத்தில் பிரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார், தமிழில் முதன்முதலாக பிரியங்கா நாயகி அறிமுகமாகிறார், படத்தில் வினை, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள், இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து கேஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றது, இன்னும் சில காட்சிகள் மட்டுமே படம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் படக்குழு. அதனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதனால் டாக்டர் படத்திலிருந்து முதல் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது செல்லமா என்ற பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் தான் எழுதியுள்ளார் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த பாடல் வெளியாகிய சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வைரலானது, ரசிகர்கள் மேலும் இந்த பாடலை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் இணையதளத்தில்.