14 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம் – மொத்தமாக அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

don
don

அண்மை காலமாக டாப் நடிகர்கள் கூட நல்லதொரு வெற்றிப்படத்தை கொடுக்க போராடி வருகின்ற நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெற்றியை பதிவு செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி.

வசூலை அள்ளிய நிலையில்   அதனை தொடர்ந்து அண்மையில் வெளியான டான் படமும்  100 கோடி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அட்லியின் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்கரவர்த்தி முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து டான் என்னும் படத்தை உருவாக்கினார்.

படம் அண்மையில் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்  சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து பிரியங்கா அருள் மோகன், எஸ். ஜே. சூர்யா, சமுத்திரகனி சூரி, சிவாங்கி என்ன ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இந்த படத்திற்கான வரவேற்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது 12 நாட்களில் மட்டுமே சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து நாட்கள் போகப்போக அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது இதுவரை 14 நாட்கள் முடிவில் உலக அளவில் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சுமார் 105 கோடி புதிய சாதனை படைத்துள்ளது.

வருகின்ற நாள்களிலும் எந்த ஒரு பெரிய படமும் இல்லாததால் சிவகார்த்திகேயனின் டான் படம் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என கூறப்படுகிறது இதனால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது மேலும் சிவகார்த்திகேயனும் செம்ம சந்தோஷத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.